Moopilla Thamizhe Thaaye | மூப்பில்லா தமிழே தாயே - Official Music Video Artist(s): A. R. Rahman, Saindhavi Prakash, Khatija Rahman, A. R. Ameen, Amina Rafiq, Gabriella Sellus, Poovaiyar Producer: A. R. Rahman Lyricist: Thamarai Director: Amith Krishnan (Studio MOCA) Produced by: maajja Official Music Video by A. R. Rahman performing Moopilla Thamizhe Thaaye. (C) 2022 maajja inc. Follow ARR: https://www.instagram.com/arrahman/ Follow maajja: https://www.instagram.com/joinmaajja/ Follow YAALL: https://www.instagram.com/yaallfest/ Follow Studio MOCA: https://www.instagram.com/moca.studio/ #ARRahman | #MoopillaThamizheThaaye | #TamilAnthem Lyrics புயல் தாண்டியே விடியல்! புதுவானில் விடியல் ! பூபாளமே வா... தமிழே வா வா... தரணியாளத் தமிழே வா..! விழுந்தோம் முன்னம் நாம்... எழுந்தோம் எப்போதும் ! பிரிந்தோம் முன்னம் நாம்... இணைந்தோம் எப்போதும் ! திசையெட்டும் தமிழே எட்டும்... தித்தித்தோம் முரசம் கொட்டும் ! மதிநுட்பம் வானை முட்டும் ! மழை முத்தாய்க் கடலில் சொட்டும் ! திசையெட்டும் தமிழே எட்டும்... தித்தித்தோம் முரசம் கொட்டும் ! மதிநுட்பம் வானை முட்டும் ! மழை முத்தாய்க் கடலில் சொட்டும் ! அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும் ! புறம் என்றால் போராய்ப் பொங்கும் ! தடையின்றிக் காற்றில் எங்கும் தமிழென்று சங்கே முழங்கும் ! தடையின்றிக் காற்றில் எங்கும் தமிழென்று சங்கே முழங்கும் ! உறங்காத பிள்ளைக்கெல்லாம் தாலாட்டாய்த் தமிழே கரையும் ! பசியென்று யாரும் வந்தால் பாகாகி அமுதம் பொழியும் ! கொடைவள்ளல் எழுவர் வந்தார்... கொடை என்றால் உயிரும் தந்தார் ! படைகொண்டு பகைவர் வந்தால்... பலபாடம் கற்றுச் சென்றார் ! மூவேந்தர் சபையில் நின்று முத்தமிழின் புலவர் வென்றார் ! பாவேந்தர் என்றே கண்டால் பாராளும் மன்னர் பணிந்தார் ! அன்னைக்கும் அன்னை நீயே ! அடிவானில் உதயம் நீயே ! முன்னைக்கும் முன்னை நீயே ! மூப்பில்லாத் தமிழே தாயே !. அன்னைக்கும் அன்னை நீயே ! அடிவானில் உதயம் நீயே ! முன்னைக்கும் முன்னை நீயே ! மூப்பில்லாத் தமிழே தாயே !. உதிர்ந்தோம் முன்னம் நாம்... மலர்ந்தோம் எப்போதும் ! கிடந்தோம் முன்னம் நாம்... கிளைத்தோம் எப்போதும் ! தணிந்தோம் முன்னம் நாம்... எரிந்தோம் எப்போதும் ! தொலைந்தோம் முன்னம் நாம்... பிணைந்தோம் எப்போதும் ! விழுந்தோம் முன்னம் நாம்... எழுந்தோம் எப்போதும் ! அன்னைக்கும் அன்னை நீயே ! அடிவானில் உதயம் நீயே ! முன்னைக்கும் முன்னை நீயே ! மூப்பில்லாத் தமிழே தாயே !. தமிழென்றால் மூவகை என்றே ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று ! இயல் நாடகம் இசையும் சேர்ந்தால் மனம் கொள்ளை கொள்ளும் என்று !... காலங்கள் போகும்போது மொழி சேர்ந்து முன்னால் போனால்... அழிவின்றித் தொடரும் என்றும் ! அமுதாகிப் பொழியும் எங்கும் ! விஞ்ஞானத் தமிழாய் ஒன்று... வணிகத்தின் தமிழாய் ஒன்று... இணையத்தின் நூலைக் கொண்டு இணையும் தமிழ் உலகப் பந்து ! மைஅச்சில் முன்னே வந்தோம் ! தட்டச்சில் தனியே நின்றோம் !கணினிக்குள் பொருந்திக் கொண்டோம் ! கலைக்கேற்ப மாறிக் கொள்வோம் ! உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம் ! உள்வாங்கி மாறிச் செல்வோம் ! பின்வாங்கும் பேச்சே இல்லை... முன்னோக்கிச் சென்றே வெல்வோம் ! புதுநுட்பம் என்றே எதுவும் கால் வைக்கும் முன்னே தமிழும் ஆயத்தம் கொள்ளும் அழகாய்... ஆடைகள் அணியும் புதிதாய் ! எங்கேயும் சோடை போகா என்னருமைத் தமிழே வா வா..! வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில் வளம் பொங்க வாவா வாவா...! அன்னைக்கும் அன்னை நீயே ! அடிவானில் உதயம் நீயே ! முன்னைக்கும் முன்னை நீயே ! மூப்பில்லாயத் தமிழே தாயே !. பழங்காலப் பெருமை பேசி... படிதாண்டா வண்ணம் பூசி... சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே..! நீ சீறி வாவா வெளியே ! வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம் வடிகட்டப் படுவார் வீட்டில் ! சொல்லுக்குள் சிறந்தது என்றால் செயல் என்றே சொல்சொல் சொல்சொல்...! சென்றிடுவோம் எட்டுத் திக்கும்... அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்... இருக்கைகள் தமிழுக்கமைப்போம்..! ஊர்கூடித் தேரை இழுப்போம் ! மொழியில்லை என்றால் இங்கே... இனமில்லை என்றே அறிவாய் ! விழித்துக்கொள் தமிழா முன்னே...! பிணைத்துக் கொள் தமிழால் உன்னை..! தமிழெங்கள் உயிரே என்று தினந்தோறும் சொல்வோம் நின்று ! உனையன்றி யாரைக் கொண்டு உயர்வோமோ உலகில் இன்று !!!... அன்னைக்கும் அன்னை நீயே ! அடிவானில் உதயம் நீயே ! முன்னைக்கும் முன்னை நீயே ! மூப்பில்லாத் தமிழே தாயே ! புயல் தாண்டியே விடியல்! புதுவானில் விடியல் ! பூபாளமே வா... தமிழே வா வா... தரணியாளத் தமிழே வா..!